;

எட்டுப் போருட்களின் விலை குறைப்பு.

ஸ்ரீலங்காவில் தினமும் தொடரும் யுத்த சூழலைத் தொடர்ந்து பொருட்களின் விலைவாசி தினமும் அதிகரித்து வருவதனால் மக்கள் பொருளாதாரரீதியில் தலைதூக்க முடியாமல் திண்டாடி வருவது யாவரும் அறிந்ததே!

கடந்த நள்ளிரவு 2009.04.09 ஆம் திகதி முதல் எட்டு வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதென விசேட வர்த்தமானி அறிவித்தல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

1. 1 kg சீனி - - - ரூ. 73.00
2. 1 kg பருப்பு - - - ரூ. 175.00
3. 1 kg பட்டாணிக் கடலை - ரூ. 98.50 சதம்.
4. 1 kg சம்பா அரிசி - - ரூ. 70.00
5. 1 kg சிவப்பு பச்சை அரிசி - ரூ. 60.00
6. 1 kg பால் மா வகைகள் - ரூ. 637.00
7. 1 kg கோழி இறைச்சி - - ரூ. 320.00
8. 1 பொதி சீமெந்து - - ரூ. 785.00